முன்னாள் சட்ட அமைச்சர் ஜைட் இப்ராகிம் தீவிர அரசியலுக்குத் திரும்பிவர ஆயத்தமாகிக் கொண்டிருப்பதுபோல் தெரிகிறது. இதை அவர் சொல்லவில்லை அவருக்கு அணுக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன,
ஜைட் அடுத்த செவ்வாய்க்கிழமை பெட்டாலிங் ஜெயாவில் நடைபெறும் ஒரு நிகழ்வில் அதன் தொடர்பில் ஓர் அறிவிப்பைச் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்நிகழ்வில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட், டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், டிஏபி முத்த தலைவர் லிம் கிட் சியாங் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
ஆனால், ஜைட் அதை உறுதிப்படுத்தவில்லை.
மலேசியாகினி அவரைத் தொடர்பு கொண்டபோது, “செவ்வாய்க்கிழமை உங்கள் கேள்விக்குப் பதிலளிப்பேன்”, என்று மட்டும் கூறினார்.
சபாஷ் சொல்லி வரவேற்கத்தக்கது. ‘அவர்’ அண்மையில் பயந்து சொன்னது போல ஜ.செ.க ஆட்சி அமைக்க நேர்ந்தால் ‘இவர்’ பிரதமர் ஆகலாம்…
ஒர்பழங்காலத்து பழமொழிஆமைபுகந்தவீடும்
அமினாபுகுந்த வீடும்உருப்படாதாம்.அந்த
வீடுஓட்டை என்றுஎதிர்வீட்டுக்கு வந்தார்.அதும்
இடிஞ்சிரும்என்று சொந்தமாக ஒருவிடு
கட்டினார் அதற்கும் பாடைகட்டினார்.இப்போ
டி.எ.பியா?விளங்கிடும்.
4,Feb,2017,11′,3.அலை ஓசைஎழுதியகருத்து.