ஒபாமா போல் அன்பானவன் இல்லை…நான் நெருப்பு: டொனால்ட் டிரம்ப் அதிரடி எச்சரிக்கை

donald-trump_orderedஐ.நா சபையின் எதிர்ப்பை மீறி ஏவுகணை பரிசோதனை செய்த காரணத்திற்காக ஈரான் நாட்டின் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பொருளாதார தடை விதித்துள்ளார்.

ஈரான் நாடு சமீபத்தில் கண்டம் விட்டு கண்டம் பாயும் அதிநவீன ஏவுகணையை பரிசோதனை செய்து பரபரப்பை ஏற்படுத்தியது.

ஈரான் அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அந்நாட்டின் மீது பொருளாதார தடையை விதித்துள்ளார்.

இது குறித்து டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட தகவலில், ‘முன்னாள் ஜனாதிபதியான ஒபாமா போல் நான் அன்பானவன் இல்லை. ஈரான் அரசு நெருப்புடன் விளையாடுகிறது’ என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

டொனால்ட் டிரம்பின் இந்த நடவடிக்கையை கண்டித்து ஈரான் அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், ‘அரசியல் முன் அனுபவம் இல்லாத, எவ்வித பயனும் இல்லாத அமெரிக்க தலைமையின் அச்சுறுத்தலை கண்டு நாங்கள் அஞ்ச மாட்டோம்’ என பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகரான Michael Flynn ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அதில், ஈரான் நாட்டின் சட்டவிரோத நடவடிக்கைகளை பார்த்து பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது. ஈரான் அரசு தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது.

ஈரான் நாட்டின் ஏவுகணை சோதனை மூலமாக அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் இந்த பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

-http://news.lankasri.com