சின்னா பின்னமான பிரான்ஸ்… இருளில் முழ்கிய மக்கள்: திண்டாடும் 250,000 குடும்பங்கள்

franceபிரான்சில் ஏற்பட்ட கொடூர புயலின் தாக்கம் காரணமாக 250,000 வீடுகளுக்கு மின் வினியோகம் தடை செய்யப்பட்டதால் பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர்.

பிரான்சில் கடந்த சனிக்கிழமை காற்று மணிக்கு 148 கி.மீற்றர் வேகத்தில் வீசியுள்ளது. இதனால் பிரான்சின் சில பகுதிகளில் மரங்கள் கீழே சரிந்து விழுந்துள்ளன. ஒரு சில வீடுகள் மற்றும் கடைகளில் உள்ள கூரைகள் உடைந்து நொறுங்கியுள்ளன.

இந்த ருத்ரதாண்டவ புயலின் காரணமாக மின்சாரம் செல்லும் வயர்கள் அனைத்தும் துண்டிக்கப்பட்டு வாகனங்கள் செல்லும் ரோட்டின் மீது கிடந்துள்ளது.

இதற்காகவே சுமார் 250,000 வீடுகளுக்கு மின் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக, மின்சாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு இரவு மட்டும் சுமார் 140க்கும் மேற்பட்ட தீயணைப்பு படை வீரர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் சாலைகளில் மரங்களை சுத்தம் செய்து வருவதாகவும், அதன் பின்னர் மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த புயலின் தாக்கம் 160 கி.மீற்றர் வேகத்திற்கு வருவதற்கு வாய்ப்புள்ளது என்றும் ஞாயிற்றுக்கிழமை மேற்கு கடலோரப்பகுதியில் இதன் தாக்கம் அதிகம் இருக்கும் என்பதால் அங்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

-http://news.lankasri.com