மற்ற நாடுகளிலிருந்து தனித்து விளங்கும் சுவிற்சர்லாந்து! எப்படி?

சுவிற்சர்லாந்து நாட்டுக்கு பல சிறப்புகள் உள்ளன. அதிலும் வரலாற்று சிறப்புமிக்க பல இடங்கள் அங்கு உள்ளன.

அங்கு போனால் நிச்சயம் காண வேண்டிய இடங்களை பற்றி காண்போம்

The Landwasser Viaduct

இந்த வளைந்த கல் சாலை வாராவதியானது சுவிஸில் உள்ள Schmittenனில் அமைந்துள்ளது. இந்த கல் குகை வழியாக இரயில் போகும் போது அதன் முழு அழகை காண முடியும்.

 

The Grande Dixence

உலகிலேயே மிக பெரிய ஈர்ப்பு அணையாக இந்த Grande Dixence அணை விளங்குகிறது. இது 300 மீட்டர் உயரம் கொண்டது. ஆல்ப்ஸஸிலிருந்து உருகும் நீர்களை சேகரிக்க இது உதவுகிறது. ஜூன் மாதத்திலிருந்து செப்டம்பர் மாதம் வரை இந்த அணையை பார்வையாளர்கள் காணலாம்.

 

The Abbey of St. Gallen

இது உலகில் உள்ள மிக பெரிய நூலகத்தில் ஒன்றாக திகழ்கிறது. இந்த கட்டிடமானது அழகிய வேலைப்பாடுகளால் உருவாகியுள்ளது. இங்கு 150,000 க்கும் மேற்ப்பட்ட புத்தகங்கள் உள்ளன.

 

The Castles of Bellinzona

Castelgrande, Sasso Corbaro மற்றும் Montebello என்னும் மூன்று வித அரண்மையால் இது அமைந்துள்ளது. இதில் Castelgrande மிக பெரியதாகும். இது பார்பதற்கே அவ்வளவு ராஜ கம்பீரத்துடன் இருக்கும்.

 

The Castle of Chillon

ஜெனிவா ஏரியில் அமைந்துள்ள இந்த அரண்மனை கட்டிடத்தை இதுவரை 1887ஆண்டிலிருந்து 20 மில்லியனுக்கும் அதிகமானோர் வந்து பார்த்துள்ளனர். மிக ஆடம்பரமாக கட்டிடக்கலையால் உருவாகியுள்ள இந்த கட்டிடம் வரலாற்று சிறப்புமிக்கதாக திகழ்கிறது.

-http://news.lankasri.com