அமெரிக்க பயணதடை: கனடிய விமான நிலையங்களில் பயணிகளுக்கு உதவ வழக்கறிஞர்கள்

கனடாவின் பெரிய விமானநிலையங்களில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் பயணதடையினால் அகப்பட்டுக்கொண்டவர்கள் கனடாவின் வழக்கறிஞர்களின் சட்ட உதவியை நாடலாம் என அறியப்படுகின்றது.

கனடிய வழக்கறிஞர்கள் பலர் அமெரிக்காவினுள் நுழைவதற்கு சரியான ஆவணங்கள் வைத்திருப்பவர்கள் தடையின்றி அமெரிக்காவிற்குள் நுழைய விமான நிலையங்களில் தன்னார்வத்துடன் உதவ முன்வந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை வாசிங்டன் நீதிபதி தடையை நிறுத்தி வைத்துள்ளார். சனிக்கிழமை இரவு டிரம்பின் நிர்வாகம் நீதிபதியின் முடிவை எதிர்த்து மேன்முறையீடு செய்தது. இதே நேரம் பாதிக்கப்பட்ட ஏழு முஸ்லீம் நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்கு பயணம் செய்யலாம் என கூறப்படுகின்றது.

பாதிக்கப்பட்டவர்களிற்கு சட்ட உதவி கிடைக்கச் செய்யும் முயற்சிகளின் பின்னணியில் உள்ள குழுவை சேர்ந்த அகதிகள் மைய வழக்கறிஞர் ஜெனிவர் பொன்ட் வழக்கறிஞர்கள், ரொறொன்ரோ பியர்சன், மொன்றியல் Pierre-Elliott Trudeau விமான நிலையம், வன்கூவர் சர்வதேச விமான நிலையம் மற்றும் ஒட்டாவா மக்டொனால்ட்-கார்டியர் சர்வதேச விமான நிலையம் ஆகிய இடங்களில் ஆயத்தமாக உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

பயணிகளின் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுகின்றனவா என வழக்கறிஞர்கள் உறுதிப்படுத்த விரும்புகின்றனர் என அவர் கூறினார்.

-http://news.lankasri.com