கடவுள்களின் பிறப்பிடம்! பிரமிடுக்குள் ஏராளமான உயிர்கள்- பலி கொடுக்கப்பட்டது ஏன்?

Teotihuacanமத்திய மெக்ஸிகோவில் அமைந்துள்ள Teotihuacan என்ற மர்மங்கள் நிறைந்த நகரம் யாரால் எப்போது நிர்மாணிக்கப்பட்டது என்பது பற்றி எந்த தகவலும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

Aztec இன மக்களால் அமைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படும் அந்த நகரம், கி.மு 100-ல் முதல் கி.பி 650 வரையிலான கால கட்டத்தில் இயங்கி கொண்டிருந்திருக்கும் என்று தொல்லியல் அறிஞர்கள் கணித்துள்ளனர்.

மேலும், அந்த நகரம் தான் கி.பி.1400-க்கு முன்பு, வடக்கு அரைக்கோளத்திலேயே (Western Hemisphere) மிகப்பெரிய நகரமாக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Teotihuacan என்ற பெயர் Nahuatl என்ற மொழியினை பேசிய Aztec இன மக்களால் வைக்கப்பட்டுள்ளது.

அந்த பெயருக்கு “கடவுள்களின் பிறப்பிடம்” என்று பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த பெயருக்கான காரணம் என்னவெனில், Aztec இன மக்கள், கடவுள்கள் அந்த நகரத்தில் தான் பேரண்டத்தை (universe) படைத்ததாக நம்பியுள்ளனர்.

-http://news.lankasri.com

https://youtu.be/NiDcRuCvv8I