ஒரே சிறைச்சாலையை சேர்ந்த 13,000 கைதிகளுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றம்

சிரியா நாட்டில் ஒரே சிறைச்சாலையில் இருந்த 13,000 கைதிகளுக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றியுள்ள அந்நாட்டு அரசை சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் கடுமையாக கண்டித்துள்ளது.

மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் உள்நாட்டு யுத்தம் நடைபெற்று வருகிறது.

இந்த யுத்தத்தில் அரசு மற்றும் கிளர்ச்சியாளர்களின் தரப்பில் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், சிரியா நாட்டில் உள்ள ஒரே சிறைச்சாலையை சேர்ந்த 13,000 கைதிகளுக்கு தூக்குதண்டனை நிறைவேற்றியுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு சிரியாவில் Saydnaya என்ற சிறைச்சாலையில் தான் இந்த கொடூரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

அதாவது, கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015 வரை இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாரத்திலும் அதிகபட்சமாக 50 கைதிகள் வரை ரகசியமாக தூக்குதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சிரியா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை சர்வதேச மன்னிப்பு சபையும், மனித உரிமைகள் ஆணையமும் கடுமையாக கண்டித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com