புதுக்குடியிருப்பில் ஏழாவது நாளாக தொடரும் கவனயீர்ப்பு போராட்டம்!

putukudiyiruppuமுல்லைத்தீவு, புதுகுடியிருப்பில் பொதுமக்கள் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்கக் கோரி இன்று ஏழாவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் புதுகுடியிருப்பு மற்றும் கேப்பாபுலவு மக்களின் பூர்வீக நிலங்களை இராணுவத்தினரிடம் இருந்து மீட்டு கொடுக்க வேண்டும் என்பது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் விசேட சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

இதன் போது குறித்த விடயங்கள் தொடர்பாக இராணுவத்தினருடன் கலந்தாலோசித்து உரிய காணிகளை மக்களிடம் கையளிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த காணிகள் மீட்கும் வரை எமது போராட்டம் தொடரும் என புதுகுடியிருப்பு மக்கள் தெரிவித்து போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர்.

இதே வேளை விமானப்படையினரிடமுள்ள தமது சொந்த நிலங்களை மீட்பதற்காக கேப்பாப்புலவில் பொதுமக்கள் பத்தவாது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: