அமெரிக்காவிற்கு மிகப் பெரிய ஆபத்து காத்திருக்கிறது: டிரம்ப் அதிர்ச்சி தகவல்

donaldஅமெரிக்க ஜனாதிபதியான டிரம்ப் அகதிகளாக வருவோரின் எண்ணிக்கை 77 சதவீதம் உயர்ந்துள்ளதால். இது அமெரிக்காவிற்கு மிகப் பெரிய ஆபத்து என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஜனாதிபதியான பின்பு டிரம்ப் இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட 7 நாட்டு குடிமக்கள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடை விதித்தார்.

இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனால் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. டிரம்ப்பின் தடை உத்தரவுக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இதன்பின், கடந்த 4ஆம் திகதியில் இருந்து தற்போது வரை 7 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்நிலையில், 4 ஆம் திகதி தொடங்கி இரண்டே நாட்களில் ட்ரம்ப் தடை விதித்த 7 நாடுகளில் இருந்து மட்டும் சுமார் 3,000 பேர் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை அமெரிக்க உள்துறை பாதுகாப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு இதே கால இடைவெளியில் 1,817 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நமது சட்ட அமைப்பு உடைந்துவிட்டது. சந்தேகத்திற்குரிய ஏழு நாடுகளிலிருந்து அகதிகளாக தஞ்சம் கேட்டு வருபவர்களில் 77 சதவிகிதம் பேர் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது மிகவும் ஆபத்தானது’ எனத் தெரிவித்துள்ளார்.

-http://news.lankasri.com