வெளிநாட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் கடுமையான கொள்கைகளை கைவிடும் சுவிட்சர்லாந்து?

swissசுவிட்ஸர்லாந்தில் குடியுரிமை பெற முயற்சிக்கும் புலம்பெயர் நாடுகளை சேர்ந்தவர்களுக்கு எதிராக காணப்படுகின்ற கடுமையான சட்டங்களை விடுவிப்பது தொடர்பிலான சர்வஜன வாக்கெடுப்பு நேற்று இடம்பெற்றது.

தற்போது சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெற்றுக் கொள்ளும் போதும் வேறு நாடுகளிலிருந்து புலம்பெயர்வோர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் தொடர்பில் கருத்திற் கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போதுவரையில் சுவிட்ஸர்லாந்தில் குடியுரிமை பெற்றுக் கொள்ள எதிர்பார்க்கும் வெளிநாட்டவர்களுக்கு 12 வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.

இதற்கு மேலதிகமாக நேர்முக தேர்வு மற்றும் வேறு பல நடவடிக்கைகளுக்கு முகம் கொடுப்பதற்கு நேரிடுகிறது. இதனையடுத்து புலம்பெயர்வோரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளை கருத்திற்கு கொண்டு இந்த சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

இதன் முடிவிற்கமைய எதிர்வரும் காலங்களில் சுவிட்ஸர்லாந்தில் இலகுவாக குடியுரிமை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு வெளிநாட்டவர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வரையில் குடியுரிமை வழங்குவதில் கடுமையான கொள்கைகளை கடைப்பிடிக்கும் நாடாக சுவிட்ஸர்லாந்து காணப்படுகின்றது.

சில நேர்முக தேர்வுகளில் சுவிட்சர்லாந்தின் பொதுவான மலைகள், சொக்ல்ட் வகைகள் ஆகியவை தொடர்பிலான கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் நபர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாத பல சந்தர்ப்பங்கள் பதிவாகியுள்ளன.

இதேவேளை இலங்கையை சேர்ந்த சுமார் 50 ஆயிரம் பேர் சுவிட்சர்லாந்தில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வருகின்றனர். சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் அகதி அந்தஸ்து கோரி விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com