தடை விதித்த 7 நாட்டு அகதிகளுக்கு அடைக்கலம் தந்த கனடா பிரதமர்: டிரம்புடன் திடீர் சந்திப்பு

justin_trumpஅமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடீயு சந்தித்து இரு நாட்டுகளின் உறவு குறித்து ஆலோசனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டிரம்ப்பை பல்வேறு நாட்டைச் சேர்ந்த தலைவர்கள் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஒரு சில தலைவர்கள் தொலைபேசியில் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஜனாதிபதி டிரம்ப்பை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடீயு வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் சந்தித்தார். அப்போது, இருநாட்டு உறவுகளை பலப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.

அதன் பின்னர் இருவரும் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் குறித்து எழுப்பிய கேள்விக்கு, டிரம்ப் தேவைக்கு ஏற்ப மாற்றிக் கொள்வோம் என்று கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி மெக்சிகோவை விட கனடா மற்றும் அமெரிக்கா இடையே இருக்கும் வர்த்தக உறவு குறித்து கவலை கொள்வதாக கூறியுள்ளார்.

டிரம்ப் ஜனாதிபதியாக பதவி ஏற்ற பின்பு இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட 7 நாட்டு அகதிகள் அமெரிக்காவிற்குள் வருவதற்கு தடை விதித்தார்.

அப்போது, அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் அகதிகள் தங்கள் நாட்டிற்குள் வரலாம் என்று கனடா பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com