கொடுமையின் உச்சம்..! ஈழப்போரை மீட்டிப்பார்க்க வைத்த சிரியா…!

உலக வரலாற்றில் இடம்பெற்ற யுத்தங்களின் போதெல்லாம், மனித உரிமை மீறல்களும், மனித குலத்திற்கு எதிரான செயற்பாடுகளும் இடம்பெற்றுள்ளன. அதற்கான ஆதரங்களும் கடந்த காலங்களில் வெளியாகியுள்ளன.

அந்தவகையில், இலங்கை ஒன்றும் அதற்கு விதிவிலக்கல்ல. இலங்கையில், கடந்த மூன்று தசாப்பதங்களாக இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது பல்லாயிரக் கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.

மேலும், விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில், இலங்கை படையினரால் யுத்தக்குற்ற செயல்கள் மேற்கொள்ளப்பட்டது. இதனை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் ஏற்றுகொண்டுள்ளது.

இதன் காரணமாக, இன்று சர்வதேச விசாரணையை தமிழ் மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இலங்கையில், யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு 7 ஆண்டுகள் கடந்துள்ளது.

எனினும், யுத்தத்தின் வடுக்கள் இன்னும் மக்கள் மனதில் இருந்து நீங்கவில்லை. இது இவ்வாறு இருக்க சிரியாவில் இடம்பெறும் உள்நாட்டு யுத்தம் ஈழப்போரை மீட்டிப்பார்க்கும் வகையில் அமைந்துள்ளது.

இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்கள் பலர் மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற நிலையில், அது போன்ற சம்பவங்கள் தற்போது சிரியாவில் அரங்கேறியுள்ளன.

இது குறித்து சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ள புகைப்படங்களும், செய்திகளும் அதனை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது.

சிரிய ஆட்சியில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களின் உடல் மெலிந்து உயிரிழந்துக் கிடந்த கைதிகளின் புகைப்படங்கள் தற்போது கசிந்துள்ளன. 21ஆம் நூற்றாண்டின் இன அழிப்புக்கு, இந்த புகைப்படங்கள் தெளிவான முத்திரையாகியுள்ளது.

சிரியாவில் இருந்து 53,000க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் இராணுவ பொலிஸ் புகைப்பட கலைஞரினால் கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்டவர்கள் நிலைமைகளை பார்க்கும் போது, சிறைச்சாலைகளில் கைதிகளுக்கு உணவு, நீர், மருந்து வழங்க தவறியுள்ளதோடு, பல மாதங்களாக சித்திரவதைக்குட்படுத்தப்பட்டுள்ள விடயம் தெரியவந்துள்ளது.

இவ்வாறு வெளியாகியுள்ள புகைப்படங்களில், ஒரு உடலில் ஒரு கண்ணை காணவில்லை, மற்றொரு உடலில் தலையில்லை, மூன்றாவது உடலில் அசிட் தீக்காயங்கள் காணப்படுகின்றன.

தினமும் இந்த உடல்கள் சிறைகளில் இருந்து டமாஸ்கஸ் என்ற மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுகின்ற நிலையில், அங்கு இந்த உடல்கள் பிளாஸ்டிக் தாள்களினால் மூடப்பட்டு பாரிய கல்லறைகளில் வீசப்பட்டுள்ளது.

வைத்தியர்கள், கூறப்படும் இடத்தில் கையெழுத்திட்ட வேண்டும். இவ்வாறான சான்றிதழ் மூலம் குழப்பமான உண்மைகளை மூடி மறைக்க வேண்டிய கட்டாயத்தில் மருத்துவர்கள் காணப்பட்டுள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டிருந்த வைத்தியர் ஒருவர், அது நரகத்தில் இருந்து ஒரு காட்சி போல் இருந்தது. அவர்கள் மரணித்ததை சரிபார்க்க கூட எங்களுக்கு நேரம் இல்லை. நான் பல பயங்கரமான காரியங்களை இங்கு கண்டேன்.

முதல் முறையாக நான் இறப்பு சான்றிதழ்களில் கையெழுத்திட மறுத்தேன். ஆனால் ஒரு புலனாய்வு நபர் என் தலை மீது AK-47 துப்பாக்கி வைத்து, “செய் அல்லது மரணித்து விடு என மிரட்டினார்… என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஜனாதிபதி அசாத் புகைப்பட ஆதரங்கள் போலியானதென நிராகரித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் ஆயுதமற்ற ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்ற போது,

அங்கு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது, துப்பாக்கி சூட்டில் காயமடைந்நதவர்கள் இரண்டு பேருந்துகள், ஒரு டிரக் மற்றும் ஒரு ஆம்பியுலன்ஸ் வண்டில் இழுத்து அடைக்கப்பட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், தற்போது வெளியாகியுள்ள இந்த புகைப்படங்கள் ஈழப்போரை மீட்டிப்பார்க்க வைத்துள்ளதுடன், சிரியாவில் இடம்பெற்ற இனவழிப்பையும் எடுத்து காட்டுகின்றது.

-http://www.tamilwin.com