டொனால்டு டிரம்ப் செயலால் பிரான்ஸ் மக்கள் எடுத்த அதிரடி முடிவு

america_franceடொனால்டு டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பொறுப்பேற்றதிலிருந்தே பல சர்ச்சைகுரிய விடயங்களை செய்து வருகிறார்.

அதிலும் 7 இஸ்லாமிய நாடுகளை சேர்ந்த மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

டிரம்பின் இந்த அறிவிப்பு பிரான்ஸ் நாட்டு மக்களின் மனதில் ஒரு மாற்றத்தை கொண்டுவந்துள்ளது.

டிரம்ப் ஜனாதிபதியாக தேர்தலில் ஜெயித்த கடந்த வருடம் நவம்பர் மாதம் 8ஆம் திகதியிலிருந்தே அமெரிக்காவுக்கு போகும் விமானம் தொடர்பான தேடுதல் பிரான்ஸ் மக்களிடம் 14 சதவீதம் குறைந்து விட்டது.

டிரம்ப் 7 நாடுகள் தடை உத்தரவுக்கு பின்னர் இது 24 சதவீதமாக அதிகரித்தது. அமெரிக்காவுக்கு போகும் ஆர்வம் எங்களுக்கு குறைந்து விட்டது என 20 சதவீத பிரான்ஸ் மக்கள் வெளிப்படையாகவே கூறியுள்ளனர்.

ஆனாலும் விமான டிக்கெட் முன்பதிவு செய்து அமெரிக்கா செல்வதில் மூன்றாவது இடத்தில் பிரான்ஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com