அதிநவீன போர் கப்பல்களுடன் களமிறங்கிய அமெரிக்கா: தென் சீன கடற்பகுதியில் அச்சம்

அதிநவீன போர் கப்பல்களுடன் தென் சீன கடற்பகுதியில் அமெரிக்கா ரோந்து நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் கொரிய தீபகற்ப பகுதியில் பெரும் அச்சுறுத்தலான சூழல் உருவாகியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி சீனா மற்றும் அமெரிக்கா இடையே எல்லை மற்றும் வர்த்தகம் தொடர்பான அழுத்தம் ஏற்பட்டதன் பின்னரே இந்த ரோந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகின் மூன்றில் ஒரு பகுதி கப்பல் போக்குவரத்து தென் சீன கடல் வழியிலேயே இடம்பெறுகின்றது. மட்டுமின்றி மிக நீண்ட காலமாக தென் சீனா கடற்பகுதியில் உள்ள நாடுகளுடன் சீனாவுக்கு பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில் தென் சீன கடல் பகுதியில் சீனா தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது.

எனினும், தென்சீனக்கடலில் உரிமை கோரி பிலிப்பைன்ஸ், வியட்நாம், புருனை, தைவான், மலேசியா, கம்போடியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகள் சீனாவுடன் போட்டிபோட்டுக்கொண்டிருக்கின்றன.

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா பல முறை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் இந்த கண்டனத்திற்கு சீனா கடந்த 15ஆம் திகதி கடும் எச்சரிக்கையும் விடுத்திருந்தது.

இந்த நிலையில் அமெரிக்கா தனது அதி நவீன விமானம் தங்கி போர் கப்பல்களுடன் தென் சீன கடற்பகுதியில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இந்த நடவடிக்கையானது சட்டத்துக்கு புறம்பானது மட்டுமல்ல தூண்டிவிடும் நடவடிக்கை எனவும் சீனா கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

குறித்த ரோந்து நடவடிக்கையில் யு.எஸ்.எஸ் Carl Vinson விமானம் தாங்கி போர்க்கப்பல், யு.எஸ்.எஸ் Wayne E. Meyer நாசகார கப்பல், F/A-18 jet fighters விமானம் உள்ளிட்டவைகள் ஈடுபட்டுள்ளன.

அமெரிக்காவின் இந்த திடீர் ரோந்து நடவடிக்கையின் காரணமாக கொரிய தீபகற்ப பகுதியில் பெரும் பதற்ற நிலை உருவாகியிருப்பதாக அரசில நோக்கர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

-http://news.lankasri.com