பிரான்சில் தீவிரவாதிகள் சிறிய வானூர்திகள் மூலம் தாக்குதல் நடத்துவதை தடுக்க அரசு வித்தியாச திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
தீவிரவாதிகள் வான்வழி தாக்குதல் நடத்த சிறிய வானூர்திகளை அதிகளவில் பயன்படுத்துகிறார்கள்.
இதை தடுக்க பிரான்ஸ் விமானப்படை தொழில்நுட்பத்தை பயன்படுத்தாமல் இயற்கையை நாடியுள்ளது.
அதன்படி பறவை இனமான கழுகுக்கு வானில் பறக்கும் வானூர்திகளை பிடிக்கும் பயிற்சியை பிரான்ஸ் விமானப்படை அதிகாரிகள் தற்போது அளித்து வருகிறார்கள்.
கழுகு மூலம் செயல்படுத்தப்படும் இந்த வழி நல்ல பலன் தரும் என பிரான்ஸ் அரசு ஆணித்தரமாக நம்புகிறது.
வானூர்திகளில் உணவுகளை வைத்து அதை பிடிக்க சொல்லி கழுகுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இது சம்மந்தமான வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளது.
-http://news.lankasri.com
https://youtu.be/V7XwMhEub18