தமிழர் நிலங்களை விடுவிக்க உடன் நடவடிக்கை எடுங்கள்! – மன்னார் பொது அமைப்புகளின் ஒன்றியம் ஜனாதிபதிக்குத் கடிதம்

ranilmythriதமிழ் மக்களை இன அழிப்புச் செய்து 8 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களில் படைத்தரப்பை வலுக் கட்டாயமாக அரசு நிறுத்தியுள்ளது.

அவற்றில் இருந்து படைகளை அகற்ற ஜனாதிபதி உடன் நட வடிக்கை எடுக்கவேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

கேப்பாப்பிலவு மக்கள் தொடர்ச்சியாக நடத்திவரும் நில மீட்புப் போராட்டம் தொடர்பாக மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம், ஜனாதிபதிக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்தக் கடிதத்தில் இவ்வாறு கூறியுள்ளது.

தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

மூன்று வாரங்களுக்கு மேலாக தமது வாழ்வுரிமைப் போராட்டத்தைக் கேப்பாப்பிலவு மக்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

ஜனநாயக ரீதியில் நடத்தப்படும் போராட்டத்தை ஆதரிக்க வேண்டியது ஜனநாயக அரசின் பொறுப்பு. படைத்தரப்பு எமது பூர்வீக நிலங்களை அபகரித்து சுகபோகம் அனுபவிக்கும் நிலையில், நாம் விரக்தியடைந்து வீதியில் நின்று போராடும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

நல்லிணக்கம் என்பது சமநிலை பகிர்வுறவாடலிலேயே தங்கியுள்ளது. ஏகாதியப் போக்கால் இன நல்லுறவு மேம்படப் போவதில்லை.

கேப்பாப்பிலவு, புதுக்குடியிருப்பில் இராணுவம் கையகப்படுத்தியுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: