அகதிகள் குறித்து சர்வதேச ரீதியில் இணைந்து செயற்பட வேண்டும்: ஜனாதிபதி

maithriசட்டவிரோதமான முறையில் புலம்பெயர்ந்து வருவோர் தொடர்பில் சர்வதேச ரீதியில் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமான ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார். புலம்பெயர்வோர் சுகாதாரம் தொடர்பான சர்வதேச ஆலோசனை மாநாட்டின் நிறைவு நிகழ்வு இன்று இடம்பெற்றது.

கொழும்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

சட்டவிரோதமான முறையில் புலம் பெயர்வோர்கள் நாட்டில் சுகாதார, சமூக, அரசியல் பிரச்சினைகள் பலவற்றை ஏற்படுத்துகின்றனர்.

இதன் காரணமாகவே, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட அமைப்புகள் புலம்பெயர்ந்து வரும் அகதிகள் தொடர்பான பிரச்சினைக்கு முன்னுரிமை வழங்கிவருகின்றது.

இந்நிலையில், ஆண்டு தோறும் ஐ.நா அமைப்பின் கூட்ட தொடர்களுக்கு செல்லும் போது அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் சுகாதாரம் தொடர்பில் தான் தனிப்பட்ட கவனம் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், சட்டபூர்வமாக வருகை தரும் புலம்பெயர்வாளர் நாட்டுக்கு ஆசீர்வாதமாக அமைகின்றனர் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: