இலங்கையர்களுக்கு அரசியல் தஞ்சம் மறுப்பு! அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு அதிகாரி கவலை

தனது உயிரை காப்பாற்றுவதற்காக பாரிய அர்ப்பணிப்புக்களை மேற்கொண்ட இலங்கையர்களின் நிலை குறித்து கவலை அடைவதாக அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு அதிகாரி எட்வர்ட் ஸ்னோவ்டன் தெரிவித்துள்ளார்.

குறித்த இலங்கை தம்பதிக்கு ஹொங்கொங்கில் அரசியல் பாதுகாப்பு வழங்கப்படாமை “விபரிக்க முடியாத சோகம்” என ஸ்னோவ்டன் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது ரஷ்யாவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ள ஸ்னோவ்டன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றையிட்டு இதனை தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவில் இருந்து தப்பி சென்று தற்காலிகமாக ஹொங்கொங்கில் தங்கியிருந்த சந்தர்ப்பத்தில், அரசியல் தஞ்சம் கோரியிருந்த இலங்கையர்கள் ஸ்னோவ்டனுக்கு இரகசிய பாதுகாப்பு வழங்கியிருந்தனர். இந்த சம்பவம் கடந்த 2013 ஜுன் மாதம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் இலங்கை பொலிஸ் குற்ற விசாரணை திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகள் சிலர் கடந்த டிசம்பர் ஹொங்கொங்கிற்கு சென்று குறித்த இலங்கையர்கள் தொடர்பில் தகவல்களை பெற்றுள்ளனர்.

குறித்த அதிகாரிகள் புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களுடன் ஹொங்கொங்கில் வசிக்கும் இலங்கையர்களிடம் தகவல் கோரியுள்ளதாக இலங்கையர்களின் சட்டத்தரணி ரொபட் டிப்போ தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த தகவல் முற்றிலும் போலியானதென தெரிவித்த இலங்கை பொலிஸார் அந்த குற்றச்சாட்டை நிராகரித்திருந்னர்..

அமெரிக்காவின் மிகப் பெரிய புலனாய்வு நடவடிக்கைகளை உலகத்திற்கு அம்பலப்படுத்திய முன்னாள் புலனாய்வு அதிகாரி எட்வர்ட் ஸ்னோவ்டனை கைது செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஸ்னோவ்டன் ரஷ்யாவில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: