தாயக உறவுகளுக்கு சர்வதேசத்தில் உரத்து குரல் கொடுக்க வேண்டும்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

gajendrgumarநீதிக்காக போராடும் தாயக உறவுகளுக்கு, புலம்பெயர் தமிழர்கள் சர்வதேசத்தில் உரத்து குரல் கொடுக்க வேண்டும் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழின அழிப்புக்கு நீதிகேட்டு எதிர்வரும் ஆறாம் ஐ.நா நோக்கி உலகத் தமிழ் உறவுகள் மாபெரும் பேரணியில் ஈடுபடவுள்ளனர். இதில் அனைத்து தமிழர்களும் பெரும் திரளாக ஒன்றிணைய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது தாயகத்தில் மண் மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை பலப்படுத்த வேண்டும் எனவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரியுள்ளார்.

-http://www.tamilwin.com

https://youtu.be/yR7BOozkcjw

TAGS: