தமிழ் நாட்டில் உள்ள புலம்பெயர் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு குறிப்பாணை ஒன்றை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கியுள்ளார்.
இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் குறிப்பாணையில் குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மாநிலத்தில் உள்ள 23 பிரச்சினைகள் தொடர்பிலும் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பாணையை வழங்கியுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள இலங்கையர்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். அதனால் அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 122 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன், தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com