தமிழர்களும் சிங்களவர்களும் ஏன் ஒற்றுமையாக இருக்க முடியாது? யாழில் ஜனாதிபதி முன்னிலையில் கேள்வி

sinhala_tamilவடக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அபிவிருத்தி செய்வதே ஜனாதிபதியின் உண்மையான அபிலாசை என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் “ஜனாதிபதியிடம் சொல்லுங்கள்” அலுவலகத்தை திறந்து வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே வடமாகாண ஆளுநர் இதை குறிப்பிட்டார். தொடர்ந்து உரையாற்றுகையில்,

இலங்கை என்ற சிறிய நாடு, சிறிய தீவில் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஏன் ஒன்றாக இருக்க முடியவில்லை என கேள்வியெழுப்பினார்.

நாம் உண்ணும் சாப்பாட்டு தட்டில் உள்ள சோறு, மிளகாய், கறுவாடு, மீன் போன்ற அனைத்தும் ஒவ்வொரு நாட்டிலிருந்தும் வருகின்றன.

ஒரு தட்டில் பல நாட்டு மக்களின் தொழில் சேர்ந்து காணப்படுவதைப் போன்று நமது இலங்கைத் திருநாட்டிலும் சிங்கள மக்களுக்கும் தமிழர்களுக்கும் ஒன்றாக சமாதானமாக இருக்க அனைத்து வசதிகளும் காணப்படுகின்றன.

இலங்கை சிங்கள தமிழ் மக்களிள் சொந்த நாடு, பிறந்த நாடு எனவும் குறிப்பிட்டார்.

சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்து பல அனுபவங்களை கொண்ட உண்ணதமான தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என புகழாரம் சூட்டியுள்ளார்.

தமிழ் மக்களுடைய சோதனை, வேதனைகளையும் பிரச்சினைகளையும் ஜனாதிபதியிடம் சொல்வதற்காகவே இந்த அலுவலகம் திறக்கப்பட்டது.

ஜனாதிபதியின் நல்ல சிந்தனையை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.

மக்களின் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கான தூரம் அதிகம், தமிழ் மொழிக்கும் சிங்கள மொழிக்கும் இடையில் வித்தியாசம் இருக்கின்றது.

ஜனாதிபதிக்கும் பொது மக்களுக்கும் இடையில் மிக தூரம் காணப்படுகின்றது. அந்த தூரத்தையும் வித்தியாசத்தையும் குறைப்பதற்காகவே ஜனாதிபதியிடம் சொல்லுங்கள் நிலையம் திறக்கப்பட்டுள்ளதாகவும் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே அறிவித்தார்.

-http://www.tamilwin.com

https://youtu.be/-iqmFzMF_p4

TAGS: