நாட்டின் 2017 புதிய பட்ஜெட்டின் போது வாவாசன்2020 போதாது என்று இன்னும் 30 ஆண்டுகள் வேண்டுமென்று நமது பிரதமர் TN50 என்று புதிய 30 ஆண்டை சேர்த்து TRANSFORMASI NATIONAL 50 என்று புதிய பொருளாதார அடையாளத்தை தந்துள்ளார்.
இங்கு தமிழர்களை மட்டும் எழுதக்காரணம் 70 % தமிழர்களின் ஏழ்மைத்தனம் இந்தியர்கள் 11 % பொருளாதாரத்தில் நலமாகவே உள்ளனர்.
மஇ கவின் துணை தலைவரும் பிரதமர் துறை துணை அமைச்சருமான மாண்புமிகு தேவமணி அவர்கள் மலேசிய இந்தியர்களுக்கு தனியா ஒரு சிறப்பு blue Print தயாரித்து வருவதாக பத்திரிக்கைகளில் படித்த ஞாபகம்.2016 டிசம்பர் மாதம் நடந்த LPS PIBG மாநாட்டில் இது குறித்து பல குறியீடுகளை சொன்னார்,
இப்போது இன்று மார்ச் 5 . பிரதமர் துறையின் கீழ் SEDIK மற்றும் SEED என்ற இரு தற்காலிக பொருளாதார சேவை நிலையங்கள் உண்டு. என் நினைவு சரியாக இருந்தால் கடந்த 5 ஆண்டுகளாக இந்த இரண்டும் பொருளாத உதவி வழங்குவதாக அறிகிறோம்.
முன்னது தமிழ்ப்பள்ளி கல்வி சமூக உதவிகளுக்கும் பின்னது வணிக கடனுதவி சேவைக்குமானதாகும். இந்த இரண்டிலும் நல்ல நிபுணர்கள் இருக்கிறார்கள். ஒருவர் மகளிர் குழந்தைப்பேறு மருத்துவர். மற்றொவர் கல்வித்துறை முனைவர். ஒருவேளை MBA கூட வைத்திருக்கலாம்.
SEDIK நிதி கொடுப்பதோடு சரி. அது ஒரு வழி பயணம். ஆனால் தரவு நிலைகள் நமக்குத்தெரிவதில்லை. எனினும் பள்ளிகள் தழுவிய விழாக்களை ஊடக ஊஞ்சலில் பார்க்க முடிகிறது. SEED வழி இன்றுவரை வெற்றிக்கொடி நட்டவர்களை ஊடக கூடங்களில் பார்க்க முடியவில்லை. இதில் SME .CGC கடன்கள் ஏறக்குறைய சரியாக உள்ளதாக அறியும் வேளையில் TEKUN சிறு கடன்கள் எடுக்கும் வணிகர்கள் தவிப்பதாக தெரிகிறது.
பொதுவாக இந்தியர்கள் பயன்பெறுமளவுக்கு இந்த இரண்டும் சேவை வழங்குவதை பாராட்டுவோம், இதன் வழி நம் இந்தியர்கள் எந்த அளவுக்கு பொருளாதரத்தில் வெற்றிப்பெற்று வணிக போராட்டத்தில் வெற்றி பெற்றார்கள் என்ற தரவு தெரியவில்லை.
நாட்டின் சொத்துடைமையில் இந்தியர்கள் 1 % இருப்பதால் இந்த உதவிகள் மேம்பாட்டை தரும் என்ற அங்கலாய்ய்பு இப்போது சொத்துடமை பற்றி யாருமே பேசுவதில்லை. ஒரு வேலை எதிர்பார்த்த 3 % தொட்டுவிட்டோமா என்ற வியப்பில் இனி கேள்விகள் வேண்டாம் என்று ம் இ கா இரண்டுபக்க நீதிமன்ற விளையாட்டில் மூழ்கிவித்திட்டோம் என்ற பயம் வந்துவிட்டது. ஒருவேளை எப்போதும்போல கதவுக்கு பின்னால் 5 கோடி காரியங்கள் ஓடுவதால் எடுபிடிகள் வாபசு ஒரு நல்ல முடிவுக்கு வந்தமைக்கு பாராட்டுவோம்.
மஇகா மலேசியா இந்தியர்களின் தாய் கட்சி, தகப்பன் கட்சி என்பதால் இந்த TN50 இன்னும் முப்பத்திமூன்று ஆண்டுகளை பேச
வேண்டாம் இன்று பொருளாதத்தில் செல்லரித்து நிற்கும் ஒட்டுமொத்த மலேசியா இந்தியர்களின் வரப்போகும் ஐந்து ஆண்டுகளின் தலை எழுத்தை காப்பாற்றவேண்டியது அனைவரின் கடமையாகும்.
இன்று உலக நாணய சந்தையில் ரிங்கிட்டின் மதிப்பு படுமோசமாக உள்ள வேளையில் இதுவரை சம்பள உயர்வில் எந்த மாற்றமும் இல்லை மாறாக விலை உயர்வு மூக்குக்கு மேல அத்தியாவிச சமையல் பொருட்களைக்கூட முகர்ந்து பார்த்து விளையால் வைத்துவீட்டு முறைத்துப்பாக்கும் நிலையில் சமுதாயம் தள்ளப்பட்டுள்ளோம். அசைவம் அதிகமென்று சைவத்தில் கைவைத்தால் உள் நாட்டு கத்தரிக்காவும் சுடுகிறது.
பெரும்பாலும் இது ஆளும் கட்சி எதிர்க்கட்சி நாடாளுமன்ற சட்டமான்ற அரசியல் வாதிகளுக்கு தெரிவதில்லை. கையில் பையில் காசு இல்லாமலே இவர்கள் ஓசியில் வாழ்வதும் நமக்குத்தெரியும் ஆக கிழிந்த ஓட்டை பையில் விலைவாசி சத்தம் “ஒய் எங்கடா போற” என்று குமுறுகிறது. முழு கார சுத்தம் பண்ண வெளிநாட்டுக்காரன் 30 வெள்ளி கேக்கிறான். கிளி ஜோஸ்யக்காரன் ௫ வெள்ளி கேக்கிறான் நாட்டில் ஜீவனாம்ச சிக்கல் தலைத்தூக்கி விட்டது. TN 50 இன்னும் உருமாற்ற மாயையில் என்னமோ நடக்கப்போவுது என்ற நம்பிக்கையில் சாலையில் வண்டிகள் ஜேம் இல்லாமல் போகிறது.
சரி உரிமை நீளுகிறது ! மரம் நட விதைக்கு வரேன்: இந்த சமுதாயத்தை காப்பாற்ற இன்றைய பொருளாதர குடைச்சலில் ௫ ஆண்டுகளுக்கு குறைந்த பட்சம் 60 % பாமர இந்திய ஏழைகளுக்கு RM 10 பில்லியன் தேவை என்பது என் கணிப்பு.
TN 50 ல் பெரும்பாலான வணிகர்களுக்கு நிதியும் வசதியும் போகும் என்ற பழைய சித்தாந்தம் இந்த ஏழை சமுதாயத்தை காப்பாற்ற போவதில்லை. உருமாற்றம் என்பது உயர்ந்த மாமனிதர்களுக்கும் அரசியல் வாதிகளுக்கும் என்றானால் ஏழைகளுக்கு எது ஏது நல் வழி என்று TN 50 சொல்ல வேண்டும் என்று மாண்பு மிகு தேவமணி அவர்கள் தங்களின் நீல நிற ஏட்டிலே காட்ட வேண்டும் என்பது நமது கோரிக்கையாகும்.
நமக்கு இன்னும் ஞாபகம் இருக்கு 5 ஆண்டுகளுக்கு முன் PNB perbadanan nasional berhad கு இந்தியர்களிடமிருந்து இரண்டரை பில்லியன் ரிங்கிட்டை கூவி கூவி பங்கு பத்திரங்களை விற்றுக்கொடுத்தார். அதன் இன்றைய டிவிடன் விளைச்சல் என்னவென்று யாருக்கும் தெரியவில்லை. அதன் இன்றைய மதிப்புதான் பத்து பில்லியன்.
நாம் இல்லாததை கேற்கவில்லை. ஆபத்தான பொருளாதர நிலையில் PNB இந்தியர்களுக்காக ஒரு தனி GLC யை தருவித்து வணிகம், கல்வி உதவிகளுக்கு முதலீடாக தரலாம் என்பது TN 50 இந்தியர்களுக்கான தனி வழியாக இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைக்கிறோம். TN 50 நல்ல நீண்டகால திட்டமென்று ஸ்டார் வ்யூவில் பத்திரிக்கையில் படித்தோம். நாம் நீல நிற நோட்டுக்கு காத்திருக்கிறோம். அது PRU 14 க்கான பரீட்சை தாளாகவும் இருக்கலாம். மகிழ்ச்சிதான் மனித குலத்தின் கடைசி ஆசை. வென்று வாருங்கள். சிந்திப்போம் !
பொன் ரங்கன்
தமிழர் தேசியம் மலேசியா