பிரித்தானியாவில், புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத்தமிழ் மக்களால் முன்னெடுக்கப்பட்ட அறவழி உண்ணாவிரத போராட்டமானது 10ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
இந்த போராட்டம் தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஐக்கிய நாடுகள் சபையிடம் முன்வைக்கும் முகமாகவும், தமிழ் மக்களின் பிரச்சினையை முன்னிறுத்தியும் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
கடுமையான குளிர், கொட்டும் மழை, அதிவேகமான காற்றுக்கு மத்தியில் வெட்டவெளியில் தாயகமக்களின் விடிவுக்காக இப்போராட்டத்தை தொடர்ந்துள்ளனர்.
உடல் உபாதை மற்றும் காலநிலை ஒவ்வாமை காரணமாக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களது வேண்டுதலுக்கமைவாக உண்ணாவிரதத்தை நிறுத்திக்கொண்ட போதும் இராசலிங்கம் திருக்குமரன் உண்ணாவிரதத்தை தனி ஒருவராக பத்தாவது நாளான இன்றுவரை தொடர்ந்த வண்ணம் உள்ளார்.
எனினும் அவரது உடல்நலத்தை கருத்தில் கொண்டும் அவர் தொடர்ந்தும் எமது தாயகத்திற்காக களமாடவேண்டிய தேவை உள்ளமையினாலும் பத்தாவது நாளான இன்று மாலையுடன் உண்ணாவிரதப் போராட்டத்தை தவிர்த்து போராட்ட வடிவத்தை மாற்றி தொடர்ந்தும் எழுச்சிப் போராட்டமாக தொடர்வதற்கு தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டங்களிலும் பெருமளவானவர்கள் கலந்துகொண்டு எமது நிலைப்பாட்டை பிரித்தானியாவிற்கும் ஐ.நாவிற்கும் வெளிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
-http://www.tamilwin.com
https://youtu.be/RWccDkSXhRY