அகதிகளாய் வெளியேற முயன்ற 22 பேரை சுட்டுத்தள்ளிய கடத்தல்காரர்கள்: அதிர்ச்சி தரும் காரணம்

நிலையற்ற அரசு கொண்டிருக்கும் லிபியாவில் பல்வேறு காரணங்களால் வாழ்வதற்கான சூழலே இல்லாத நிலை ஏற்பட்டிருக்கிறது. 2011யில் நடந்த உள்நாட்டுப் போர், அதிபர் கடாபியின் வீழ்ச்சி போன்ற விஷயங்களுக்குப் பிறகு லிபியா கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் லிபியாவிலிருந்து மத்திய தரைகடல் வழியாக இத்தலி நாட்டிற்கு குடியேறும் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அந்த வகையில், மக்களைப் படகுகளில் கொண்டு சேர்க்கும் கடத்தல் கும்பலிடம் 22 பேர் பணம் கொடுத்திருந்தனர். அவர்கள் கிளம்பும் நேரம், கடல் கடுமையான கொந்தளிப்பில் இருந்ததாலும், வானிலை மிக மோசமாக இருந்ததாலும் அந்த மக்கள் படகுகளில் ஏற மறுத்துள்ளனர்.

இது சம்பந்தமாக ஏற்பட்ட தகராறில், அந்தக் கடத்தல்காரர்கள் அங்கிருந்த 22 பேரையும் சரமாரியாக சுட்டுக் கொன்றுவிட்டதாக அதிர்ச்சிகர தகவல் வெளியாகியுள்ளது.

-http://news.lankasri.com