தீவிரவாத வேட்டைக்கு தயாரான அமெரிக்கா..? நூற்றுக்கணக்கான போர்க்கப்பல் தயார் நிலையில்

isissதீவிர வாதிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் நவீன ஆயுதங்களை தாங்கிய போர்க்கப்பல்கள் சிரியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க பென்டகனை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

தீவிரவாதிகளுக்கு எதிரான கூட்டுப் படைகளுக்கு உதவும் நோக்கில் இவ்வாறு நூற்றுக்கணக்கான போர்க்கப்பல்கள் சிரியா கடல் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவின் ரக்கா நகரை தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ள நிலையில், அதனை தலைநகரமாக மாற்றியுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், ரக்கா நகரை தீவிரவாதிகளின் பிடியில் இருந்து மீட்பதற்கு சிரியா நாட்டு படையினர் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் சிரியா நாட்டு படைகளுக்கு அமெரிக்க படை உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஈராக்கில் நடத்தப்பட்ட அதிரடி தாக்குதல்களை போல சிரியாவிலும் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பென்டகன் அறிவித்துள்ளது.

இதேவேளை, சிரியாவில் 500 அமெரிக்க படையினரே அதிகபட்சமாக நியமிக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி ஒபாமா தலைமையிலான அரசாங்கம் தெரிவித்திருந்தது.

எனினும், ட்ரம்ப் தலைமையிலாக தற்போதைய அரசாங்கம் மேலதிகமாக 500 அமெரிக்க வீரர்களை சிரியாவுக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://www.tamilwin.com