உலகிலேயே முதன் முதலாக ஐஸ்லாந்து நிகழ்த்தும் அபார சாதனை

icelandஉலக நாடுகளில் முதன் முதலாக ஆண், பெண் ஊழியர்களுக்கு சமமான ஊதியம் வழங்க வேண்டும் என்ற புதிய சட்டத்தை ஐஸ்லாந்து அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐஸ்லாந்து நாட்டின் பிரதமரான Bjarni Benediktsson இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஆண், பெண் ஊழியர்களுக்கு எவ்வித பாகுப்பாடும் இன்றி ஊதியம் வழங்க அரசு திட்டமிட்டு வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

தற்போது நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களுக்கு 30 நாட்கள் அவகாசம் அளித்திருப்பதாகவும், இந்த நாட்களுக்குள் நிறுவனங்கள் அனைத்து இந்த புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்து தகுந்த சான்றிதழ்களை பெற வேண்டும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் நிறுவனங்கள் அனைத்து அரசின் கொள்கை முடிவுகளை சரியாக பின்பற்றி வருகிறதா என்பதை அரசாங்கத்திற்கு உறுதிப்படுத்த வேண்டும்.

25 ஊழியர்களுக்கு மேல் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு இந்த புதிய சட்டம் பொருந்தும்.

எதிர்வரும் 2020 ஆண்டிற்குள் இந்த புதிய சட்டம் நாடு முழுவதும் அமுல்ப்படுத்த தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

-http://news.lankasri.com