டொனால்டு டிரம்புக்கு கிடைத்த முதல் வெற்றி

donaldஅமெரிக்காவுக்குள் ஆறு நாடுகளின் மக்கள் நுழைய தடை விதித்த டிரம்பின் புதிய உத்தரவுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சமீபத்தில் பிறப்பித்த புதிய உத்தரவில் சிரியா, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான், ஏமன் ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு தடை விதித்தார்.

டிரம்பின் இந்த புதிய உத்தரவுக்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. அமெரிக்காவின் ஹவாய், மசாச்சூசெட்ஸ், நியூயோர்க், ஒரேகன் ஆகிய மாகாணங்கள் டிரம்பின் தடை உத்தரவை நீக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இது குறித்து தீர்ப்பளித்த நீதிபதி, புதிய பயண தடை உத்தரவுக்கு உடனடி தடை விதிக்க முடியாது.

நடைமுறை காரணங்களால் அப்படி செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு டிரம்பின் வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

-http://news.lankasri.com