திருமணத்திற்கு முன் தவறான உறவுகொண்ட பெண்ணிற்கு பொதுமக்கள் முன்னிலையில் 100 சாட்டையடி

saattaiyadiஇந்தோனேசியா நாட்டில் திருமணம் ஆகாமல் உடலுறவுக்கொண்ட ஆண் மற்றும் பெண்ணிற்கு பொதுமக்கள் முன்னிலையில் சாட்டையடி தண்டனையாக வழங்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியா நாட்டில் உள்ள Aceh என்ற ஒரே மாகாணத்தில் மட்டுமே இஸ்லாமியர்களின் ஷரியா சட்டம் முழுமையாக அமுலில் இருந்து வருகிறது.

திருமணம் செய்யாமல் உடலுறவு வைத்துக்கொள்வது, மது அருந்துவது, பணம் வைத்து சூதாட்டம் விளையாடுவது உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், Banda Aceh நகரை சேர்ந்த ஆண் மற்றும் பெண் ஆகிய இருவருக்கு பொதுமக்கள் முன்னிலையில் சில தினங்களுக்கு முன்னர் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இருவரும் திருமணம் செய்துக்கொள்ளாமல் உடலுறவில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

பெண்ணிற்கு 100 சாட்டையடியும், ஆணிற்கு 120 சாட்டையடியும் வழங்கப்பட்டுள்ளது.

இதே போல், சூதாட்டம் ஆடிய குற்றத்திற்காகவும், சிறுமிகளை பாலியல் சித்ரவதை செய்த குற்றத்திற்காகவும் இந்த கூட்டத்தில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியா நாட்டில் போதை மருந்து கடத்தலுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படுவது போல் மதக் கொள்கைகளை மீறுப்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com