மனித உரிமைப் பேரவைக்கு கால அவகாசம் கொடு கொடுக்கவில்லை என்பது தமிழ் தேசிய கூடடமைப்பினராகிய கருத்து அல்ல, கால அவகாசம் கேட்பது இலங்கை அரசு. கால அவகாசம் கொடுப்பது மனித உரிமைப் பேரவை. இது தமிழ் தேசிய கூட்டமைப்பாகிய எங்களுக்கு சம்பந்தமில்லை. செய்து முடிக்கவேண்டும் என்பது தான் எங்களின் கோரிக்கையென நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.
கல்குடா கல்வி வலயத்திற்குப்பட்ட வாகனேரி கோகுலம் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி பாடசாலையின் அதிபர் ந.சுரேந்திரகுமார் தலைமையில் இடம்பெற்றபோதே இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கும்போது,
இலங்கை தொடர்பான மனித உரிமை ஆணையகத்திற்கு கோரப்படும்; கால அவகாசம் தொடர்பான விடயத்தில் சில ஊடகங்கள் குழப்பகரமான செய்திகளை வெளியீட்டுக் கொண்டிருக்கின்றது.
கால அவகாசம் கொடுக்ககூடாது, அல்லது கொடுக்க வேண்டுமென்று தமிழ் தேசிய கூட்டமைப்பினரை பிரித்து ஆழுகின்ற தந்திரத்தை அல்லது தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் மத்தியில் ஒரு வேற்றுமையை ஏற்படுத்தக்கூடிய விதத்தில் ஊடகங்கள் செயற்படுகின்றனர்.
இவ்வாறான ஊடகங்களில் மீது கவனமாக இருக்கவேண்டும்.
கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷ போன்றவர்களை ஆதரித்து மீண்டும் மீண்டும் மஹிந்தாவை ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும் என்ற அடிப்படையில் அந்த காலத்தில் கை தூக்கியவர்கள் கூட அதாவது மஹிந்த எத்தனை தடவையாவது ஜனாதிபதியாக வரலாம் என்ற வாக்கெடுப்பு நடந்தபோது 163 பேர் அதற்கு கையை உயர்த்தி இருந்தார்கள், சிலர் பயத்திற்கும், பணத்துக்கும் கையை உயர்த்தி இருக்கலாம்.
இப்படிப்பட்டவர்கள் கூட தாங்கள் சுத்தக்கார கொத்தமல்லி போன்று தாங்கள் ஏதோ மனித உரிமைகள் பேரவை விடயத்தில் தமிழர்களுக்காக உருகி ஊத்துப்படுவது போன்று பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறான விடயத்தில் நாங்கள் தெளிவாக இருக்கின்றோம், ஒத்துக் கொண்ட அனைத்து விடயங்களையும் மனித உரிமை பேரவை இலங்கை அரசுக்கு சொல்லியிருக்கின்றது. அவ்வாறான விடயங்களை செய்யவேண்டும்.
கால அவகாசம் கொடு கொடுக்கவில்லை என்பது தமிழ் தேசிய கூடடமைப்பினரின் கருத்து அல்ல. கால அவகாசம் கேட்பது இலங்கை அரசு. கால அவகாசம் கொடுப்பது மனித உரிமைப் பேரவை.
இது தமிழ் தேசிய கூட்டமைப்பாகிய எங்களுக்கு சம்பந்தமில்லை. செய்து முடிக்கவேண்டும் என்பது தான் எங்களின் கோரிக்கையென தெரிவித்தார்.
-http://www.tamilwin.com