வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் 22 ஆவது நாளாகவும் இன்று தமது சுழற்சி முறையிலான போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை விடுவிக்கக் கோரியும், அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியும் மற்றும் அவசரகாலச் சட்டத்தினை நீக்குமாறு கோரியும் இவர்கள் தமது போராட்டத்தினை தொடர்ந்து வருகின்றனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
வெள்ளைவானில் கடத்தப்பட்டவர்கள் இறுதிப்போரில் காணாமல் ஆக்கப்பட்டோர் பற்றி எமக்கு எதுவும் தெரியாது என்று இந்த அரசாங்கம் கூறலாம், எமக்கு தெரியும் இவர்களை இந்த அரசுதான் வைத்திருக்கின்றது என்று.
https://youtu.be/hpDwwE5uRzM?list=PLXDiYKtPlR7Mxk3nVAlntpCe-UlBthx1e
விசாரணை என்ற பெயரில் இராணுவத்திடம் நாம் ஒப்படைத்த பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்று இந்த அரசு கட்டாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
அவர்களை நாம் பத்திரமாக இந்த அரச இராணுவத்திடம் ஒப்படைத்தோம். ஆனால் இன்றோ அவர்களை தொலைத்தவர்களாய் தேடி அலைகின்றோம் என தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
-http://www.tamilwin.com