இலங்கை பாதுகாப்பு தரப்பினரை நீதிமன்றத்தில் முன்நிறுத்தும் எந்தவித முயற்சியும்மேற்கொள்ளப்படவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர்இதனை தெரிவித்தார்.
இவ்வாறான நிலையில், பாதுகாப்பு படையினரை சர்வதேச நீதிமன்றத்தின் முன் கொண்டுசெல்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சில தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.
வெள்ளைக்கொடி விவகாரம் போன்ற விடயங்களில் நல்லாட்சி அரசாங்கம் சிறந்த முறையில்நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
எனினும், பாதுகாப்பு தரப்பினரை அரசாங்கம் காட்டிக்கொடுத்து விட்டதாக குற்றம்சுமத்துகின்றனர்.
இவ்வாறு குற்றம் சுமத்துகின்றவர்களே, சர்வதேச நீதிமன்றம் போன்ற விடயங்களுக்கு காரணமாகஅமைந்தனர் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் சந்தேகம் தேவை எதிர்பார்ப்பு என்ன? பிரதமர் விளக்கம்
நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்டு சந்தேகம் என்ன? அவர்களின் தேவை என்ன? எதிர்பார்ப்பு என்ன என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விளக்கமளித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
முப்பது வருடங்களாக பிளவு பட்டிருந்த நாட்டை படிப்படியாக ஒன்றிணைப்பது அவசியமானதாகும். இதன்போது, அடிப்படைவாதிகள் இனவாதத்தை முன்னிறுத்தி பிரச்சாரங்களை மேற்கொள்கின்றனர்.
மனித உரிமையினை நிலைநாட்டுமாறு மனித உரிமை அமைப்புக்கள் வலியுறுத்துகின்றன.
இவை இரண்டிற்கும், இடைப்பட்ட வகையில் அனைத்து மக்களுக்கும் நீதியை நிலைநாட்டும் முயற்சியை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
இந்த முயற்சிகளின் போது, தமது உரிமைகள் பறிபோய் விடுமோ என்ற சந்தேகம் சிங்கள மக்களுக்கு எழுந்துள்ளது.
தமக்கான நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்பது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.
இதேவேளை, நாட்டில் உள்ள ஏனைய மக்களின் உரிமைகள் தமக்கும் சரிசமமாக பகிரப்பட வேண்டும் என்பது முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்பாகவுள்ளது.
இவ்வாறான நிலையில், நாட்டின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மக்களுக்கும் நீதியை நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
-http://www.tamilwin.com

























