புலிகளுடனான இறுதி யுத்தம் : உண்மை நிலவரத்தை ஜனாதிபதிக்கு வழங்க தயாராகும் படையினர்..!

mullivaikkaal_murdersபுலிகளுடனான இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்ற விடையங்கள் தொடர்பில் இராணுவத்தினர் தங்களது உண்மையான நிலைப்பாட்டினை ஜனாதிபதிக்கு வாய்மொழிமூலமான அறிக்கையினை கையளிக்க விரும்புவதாக, தேசிய அமைப்புக்களின் ஏற்பாட்டாளர் பெங்கமுவேநால தேரர் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் அறிக்கை ஒன்றினை கையளித்திருந்தார்.

குறித்த விடயத்தினை ஜனாதிபதிக்கு தெரிவிக்குமாறு கோரி ஜனாதிபதியின் உதவி செயலாளர் சுமந்திரண சிங்கவிடம் இந்த அறிக்கை கையளிக்கப்பட்டது.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த காலத்தில் இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தின் போது இராணுவ வீரர்கள் யுத்த குற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து முன்னெடுக்கப்படவுள்ள விசாரணைகளை உடன் நிறுத்த வேண்டும்.

தற்போது நாட்டில் பாதுகாப்பு படையினர் சர்வதேச நாடுகளுக்கு மத்தியில் குற்றவாளிகளாக்கும் முயற்சிகள் பல மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றதுடன், பலர் காட்டிக்கொடுக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், யுத்தத்தின் போது இராணுவத்தினர் குற்றம் இழைத்ததாக கூறும் அறிக்கையும் சர்வதேசத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இராணுவத்தினர் தங்களது உண்மையான நிலைப்பாட்டினை ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தும் முகமாக வாய்மொழிமூலமான அறிக்கையினை கையளிக்க விரும்புவதாக பெங்கமுவேநால தேரர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: