கனடா- ரொறன்ரோ நகரின் மாநகராட்சி மன்றத்தலைவர் ஜோன் ரொரி இன்று முள்ளிவாய்க்கால் சென்றுள்ள நிலையில் அவர் முல்லைத்தீவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்திருக்கும் காணமல் போனோர்களின் உறவினர்களுடன் சந்தித்து கலந்தரையாடியுள்ளார்.
குறித்த பிரமுகருடன் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் மற்றும் கனடா வாழ் தமிழ்மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் அங்கு சென்றிருந்தனர்.
இந்த நிலையில் அங்குள்ள மக்கள் தமது பிள்ளைகளை தாம் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என்று கண்ணீர் வடித்து கதறி அழுதுள்ளனார்.
இதனை பார்த்த அங்கு சென்ற மக்கள் பிரதிநிதிகள் குறிப்பாக ஜோன் ரொரி அவர்களின் கண்கலங்கிய நிலையில் முகத்தில் பெரும் சோக நிலை ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது.
தொடர்ந்து அங்குள்ள பொது மக்களுக்கு ஆறுதல் கூறிய ஜோன் ரொரி பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை காதால் கேட்பதை விடுத்து நேரில் சென்று பார்க்க விரும்பியதாலே உங்கள் முன்னே நிற்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
-http://www.tamilwin.com




























