பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்திய நபர் தீவிரவாதியாக இருக்கக்கூடும் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதுடன், அவர் தொடர்பான புகைப்படம் ஒன்றையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானியாவின் லண்டனில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென நடத்திய தாக்குதலால் பலர் காயத்துக்குள்ளாகினர். இந்நிலையில் அது குறித்து பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
முன்னதாக லண்டனில் உள்ள வெஸ்ட் மின்ஸ்டர் பாலத்தில் பொதுமக்கள் நடந்து செல்லும் பாதையில் மர்பநபர் ஒருவர் தன்னுடைய காரின் மூலம் விபத்தை ஏற்படுத்திவிட்டு, அதன் பின்னர் துப்பாக்கி மற்றும் கையில் கத்திகளுடன் பாராளுமன்றத்தில் நுழைந்து பொலிசாரை தாக்கியுள்ளார்.

இதேவேளை, குறித்த நபர் நடத்திய தாக்குதலில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் என்றும், ஒரு நபர் அங்கிருந்த தண்ணீரில் குதித்து தப்பித்ததாகவும் கூறப்படுகிறது.

அந்த நபர் கையில் இரண்டு கத்திகள் மற்றும் துப்பாக்கியுடன் பாராளுமன்றத்திற்குல் நுழைந்து பொலிசாரை தாக்கியதால், பொலிசார் உடனடியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் ஒரு பொலிசார் மற்றும் இரண்டு நபர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது.
தாக்குதல் நடத்திய நபர் மீது பொலிசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதால், அவர் மருத்துவமனைக்கு செல்லும் பாதையில் இறந்துவிட்டதாகவும், இதனால் இதுவரை நான்கு பேர் உயிரிழந்திருப்பதாக லண்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் அந்த நபர் ஆசியாவை சேர்ந்தவர் என்றும், அவரின் வயது 40 முதல் 49 வயது வரை இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.
இத்தாக்குதலுக்கு மேலும் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவரை பொலிசார் தேடிவருவதாகவும் கூறப்படுகிறது.

திடீரென்று நடந்த இத்தாக்குதலால் தெரசாமே உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பாக காரில் அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.


-http://news.lankasri.com

























