விசேடமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய தலைமைகள் இரா.சம்பந்தன்ஐயா, சுமந்திரன் ஐயா மற்றும் மாவை சேனாதிராஜா போன்றவர்களுக்கு எங்களது போராட்டம்அறிந்தும் தெரிந்தும் தமிழர்களாகிய எங்களின் பிரச்சினைகளை இன்னும்வெளிப்படுத்தாமல் மௌனம் சாதிப்பது எங்களுக்கு மன வேதனையைத் தருவதாக உள்ளதுஎன அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரி மாணவர்களில் ஒரு வராகிய உனேஸ்குணாளன் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
நாங்கள் ஏன் உங்களுக்கு வாக்களித்தோம்என்ற ஒரு கேள்வி கூட எங்களிடத்தில் இருந்து கொண்டிருக்கிறது.
எங்களை சார்ந்துஇருக்கின்ற அரசியல் தலைமைகள் அதுவும் விசேடமாக தமிழ்த்தேசியக்கூட்டமைப்புஅதேபோல முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகளினுடைய ஒரு சில அரசியல் தலைமைகள் மற்றும்அதிகாரிகள் ஓரிரு தடவைகள் எங்களை சந்தித்து வாய் வார்த்தையாக சில காரியங்களை எங்கள்முன்னாலேயே முன்மொழிந்து சென்றார்கள் ஆனால் இப்பொழுது 25 நாட்களாகஇடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற எங்கள் போராட்டத்தில், ஆரம்பக் கட்டத்தில்வந்து பார்த்தவர்கள் இப்பொழுது எந்தக் கரிசனையும் அற்றவர்களாக கேட்பார்பார்ப்பார் அற்றவர்களாக எங்களை புறந்தள்ளியிருப்பது எங்களுக்கு மிகுந்த மன வேதனையைத்தருகின்றது.
எனவே வேலையில்லா பட்டதாரி மாணவர்களினுடைய மனநிலையினை கருத்திற்கொண்டுஎங்களினுடைய பிரச்சினைகளை பாராளுமன்றில் தெரியப்படுத்தி அதி மேதகு ஜனாதிபதிமற்றும் பிரதமரோடு இது சம்பந்தமாக காத்திரமாக உரையாடுங்கள் என பட்டதாரி மாணவர்கள்சார்பாக குறிப்பிட விரும்புகிறோம்.
தமிழ்த் தலைமைகள் மீதான சலிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படவேண்டாமெனவும்சிறுபான்மையிலும் சிறுபான்மையான நம்மளுடைய பிரச்சினைகளுக்கு நீங்கள் தான்முன்னின்று போராட வருவதுடன் எங்களோடு கை கோர்க்கும் படியாக ஊடகங்கள் வாயிலாகதெரிவித்துக்கொள்ள விரும்புகிறோம் என குறிப்பிட்டிருந்தார்.
-http://www.tamilwin.com