சீனாவில் விபத்தில் சிக்கிய நபர் ஒருவருக்கு அவரது கையில் காதை வளர்த்து அதையே அவருக்கு பொருத்தி மருத்துவர்கள் செயல்பட வைத்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் சியான் நகரத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு விபத்து ஒன்றில் காதை இழந்த ஜி என்பவருக்கு செயற்கையாக ஒரு காதை கையில் வளர்த்து, அதை பொருத்தி வெற்றியடைந்துள்ளனர் சீன மருத்துவர்கள்.
3டி தொழில்நுட்பத்தினை பயன்படுத்தி, விலா குருத்தெலும்பை காது போல் வடிவமைத்து அது கையில் வளர்க்கப்பட்டது. இது ஜியின் கையில் பல மாதங்களுக்கு வளரக் கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், மருத்துவர்களின் உதவியால் கடந்த நவம்பர் மாதம் ஜி காதை வளர்க்க தொடங்கினார். கடந்த 4 மாதங்களாக காது ஜியின் கையில் வளர்க்கப்பட்டது.
அந்தக் காது அவரது உடலில் ஒட்டி வளர ஆரம்பித்துவிட்டதாம். வளரவளர அந்தக் காது உணர்ச்சியுள்ள காதாக மாறிவிட்டதாக மருத்துவர் குவோ தெரிவித்துள்ளார்.
தற்போது நன்கு வளர்ச்சி அடைந்த அந்த காதை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி காது இருக்க வேண்டிய இடத்தில் பொருத்தியுள்ளனர்.
சுமார் ஏழு மணி நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றியடைந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். புதிதாக பொருத்தப்பட்ட அவரது காது தற்போது நன்றாக கேட்கப்படுகிறது எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-http://news.lankasri.com