மக்கள் தூங்கும் நேரத்தில் நடந்த பேரழிவு! கொலாம்பியாவில் 150 பேர் பலி? 220 பேர் மாயம்

கொலாம்பியாவில் நள்ளிரவு நேரத்தில் மக்கள் தூங்கிக் கொண்டிருந்த போது, திடீரென ஆற்றின் கரை உடைந்து நீர் நகரத்திற்குள் புகுந்ததால், 150-க்கும் மேற்பட்டோர் பலியாகியிருப்பதாகவும், 220 பேர் காணவில்லை என்றும் தகவகல்கள் வெளியாகியுள்ளது.

கொலாம்பியாவில் பெய்து வரும் கன மழை காரணமாக மோகா பகுதியில் நேற்று இரவு இரண்டு ஆறுகள் ஆற்றின் கரையை உடைத்துவிட்டு நகரத்திற்குள் புகுந்தது.

இதனால் இரவில் தூங்கிக்கொண்டிருந்த மக்கள் ஏராளமானோர் பலியாகியுள்ளனர். திடீரென்று நடந்த இந்த சம்பவத்தால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்குள் அனைத்தும் நடந்து முடிந்துவிட்டது.

இதில் மரங்கள், வளர்ப்பு விலங்குகள், வீடுகள் மற்றும் கார்கள் போன்றவைகள் அதிக சேதத்திற்குள்ளாகியுள்ளன. ஒரு சில கார்கள் வீட்டின் மேற்கூரையின் மீது நிற்கின்றன.

இது குறித்து அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகையில், இச்சம்பவத்தால் தற்போது உள்ள நிலைமைவரை 154 பேர் வரை இறந்திருக்க கூடும் என்றும், 220 பேர் காணாமல் போய் உள்ளனர் என்றும் 300க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் நடப்பதற்கு முன்னர் ஒரு அபாய ஒலி எழுப்பப்பட்டதாகவும், ஆனால் இரவு நேரம் என்பதால் மக்கள் இதை கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ஆனால் கொலாம்பியா அரசாங்கம் தரப்பில் இதுவரை 112 பேர் இறந்துள்ளதை உறுதி செய்துள்ளது. மேலும் இறந்தவர்களின் எண்ணிக்கை உயர்வதற்கு வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தியுள்ள இச்சம்வத்தால், அந்நகர மக்கள் காணமல் போன தங்கள் உறவினர்களை கண்ணீர் விட்டு தேடி வருகின்றனர். இதனால் இரண்டு முக்கிய பாலங்கள் தரைமட்டமாகியுள்ளன.

மேலும் இச்சம்பவத்தால் ஏராளமான பாதுகாப்புபடை வீரங்கள் அங்கு விரைந்துள்ளனர்.

 

-http://www.tamilwin.com