போரின் இறுதிக்கட்டம் தொடர்பாகவோ, போர்க்குற்றங்கள் தொடர்பாகவோ, விசாரணை செய்வதற்கு, எந்தவொரு வெளிநாட்டு தீர்ப்பாயத்தையோ, நீதிபதியையோ சிறிலங்கா அரசாங்கம் அனுமதிக்காது என்று சிறிலங்காவின் திறன் விருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்துக்கு இணங்கியதன் மூலம் சிறிலங்கா அரசாங்கம் நாட்டைக் காட்டிக் கொடுத்து விட்டதாக மகிந்த ராஜபக்ச சுமத்திய குற்றச்சாட்டுத் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர், இவ்வாறு குறிப்பிட்டார்.
‘வெளிநாட்டு நீதிபதிகளோ, தீர்ப்பாயங்களோ போருடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து விசாரிக்க அரசாங்கம் அனுமதிக்காது என்று சிறிலங்கா அதிபரும், பிரதமரும் தெளிவாக கூறியுள்ளனர்.
இவர்கள் இருவரும், இரண்டு கட்சிகளினதும் தலைவர்கள். எனவே, வெளிநாட்டு நீதிபதிகளின் விசாரணைக்கு வழியே இல்லை.
வெளிநாட்டு நீதிபதிகள் விசாரணைகளில் பங்கேற்பதற்கு அரசியலமைப்பில் இடமில்லை.
தருஸ்மன் குழுவின் அறிக்கையை அப்போதைய அரசாங்கம் நிராகரித்திருந்தது. முறையற்றவகையில் நியமிக்கப்பட்டிருந்த அந்தக் குழுவுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தை ஒப்பிட முடியாது. ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-puthinappalakai.net
குற்ற நெஞ்சு குறுகுறுக்குதோ?