சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்லாத வகையில் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் நிறைவேற்றக் கூடிய வகையிலான அரசியலமைப்புத் திருத்த யோசனை தொடர்பான வரைவு ஒன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது சட்ட அறிஞர்களுக்கு அறிவித்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.
மாகாண முதலமைச்சர்களுடன் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின் போது ஜனாதிபதி இதனை அவர்களுக்கு தெளிவுப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டை பிளவுப்படுத்தும் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படுவதாக சிலர் குற்றம் சுமத்தினாலும் அரசியலமைப்புச் சட்டம் தொடர்பான வரைவு கூட இதுவரை தயாரிக்கப்படவில்லை என ஜனாதிபதி கூறியுள்ளார்.
நாட்டை பிளவுப்படுத்தவோ அல்லது சமஷ்டி முறையை ஏற்படுத்தவோ தான் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி இந்த சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.
-http://www.tamilwin.com

























