தமது காயங்களை ஆற்ற, நீதி ஒன்றே அவசியம்: சர்வதேச மன்னிப்பு சபை

amnesty-international-logoஇலங்கையில் போரின்போது காணாமல் போனோர் விடயத்தில் இன்னும் தாமதங்களை ஏற்க முடியாது என சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.

மன்னாரில் காணாமல் போனோரின் உறவினர்களை, மன்னிப்புசபையின் செயலாளர் சலில் செட்டி சந்தித்த போது இந்தக்கருத்தை வெளியிட்டதாக மன்னிப்புசபையின் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமது காயங்களை ஆற்ற, நீதி ஒன்றே அவசியம் என்ற தலைப்பில் மன்னிப்புச்பையின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் போரின் போது ஆயிரக்கணக்கானோர் காணாமல் போனதாக முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன

தமது உறவுகள் எங்கேயிருக்கிறார்கள் என்பது தெரியாமல் அவர்கள் பெற்றோர்களும் உறவினர்களும் ஏக்கம் கொண்டுள்ளனர்

எனினும் இந்த ஏக்கங்களை போக்கும் வகையில் நீதியான நடவடிக்கைகள் எவையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

எனவே போரின் வடுக்களை ஆற்றுப்படுத்தாமல் எதிர்கால உறுதிமொழிகளை நோக்கி நகரமுடியாது என மன்னிப்புசபையின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்

இந்தநிலையில் காணாமல் போனோர் விடயத்தில் இலங்கையின் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.

நடைமுறை அரசாங்கம் நல்லிணக்கத்துக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

எனினும் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருக்கும் காணாமல் போனோரின் விடயத்தை கிடப்பில் போடமுடியாது.

கடந்த கால வன்முறையில் இருந்து நாடு மீளவேண்டுமாயின் நீதி, உண்மை, மீண்டும் வன்முறையற்ற நிலைமை உறுதிப்படுத்தப்படுத்தப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புசபையின் செயலாளர் சலில் செட்டி குறிப்பிட்டுள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: