போலி பட்டங்கள் வைத்துள்ள எம்பிகளும் உள்ளனராம்: டிஏபி எம்பி குற்றச்சாட்டு

dapஎம்பிகளில்  சிலர்  வைத்துள்ள  முதுகலை,  முனைவர்   பட்டங்கள்  போலியானவை   என    டிஏபி   நாடாளுமன்ற   உறுப்பினர்    ஒங்  கியான்  மிங்   கூறினார்.

கேள்வி   நேரத்துன்போது     பேசிய   ஒங்,  “இந்த  மக்களவையில்  உள்ள   சில  மாண்புமிகுகள்   வைத்துள்ள   டாக்டர்,  முதுகலை   பட்டங்கள்   போலியானவை” என்று  கூறினார்.  ஆனால்,  யாருடைய  பெயரையும்   அவர்  குறிப்பிடவில்லை.

அதற்கான  ஆதாரங்கள்   தம்மிடம்   இருப்பதாகவும்   அந்த   செர்டாங்   எம்பி   குறிப்பிட்டார்.