புதிய அரசியமைப்பில் மலையக மக்களுக்கு நிர்வாக அதிகாரம் வழங்கப்படவேண்டும் என்று கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுச்சாமி ராதாகிருஸ்ணன் கோரியுள்ளார்.
செய்தி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
மலையக மக்களை பொறுத்தவரை தனிநாட்டை அவர்கள் கோரவில்லை. அதிகாரங்களையே கோருகின்றனர்.
எனவே இந்த அதிகாரங்கள், புதிய அரசியல் அமைப்பில் இணைத்துக்கொ கொள்ளப்படவேண்டும் என்று ராதாகிருஸ்ணன் கேட்டுள்ளார்.
வெளிநாடுகளுக்கு செல்லும் மலையகப் பெண்களின் மரண வீதம் அதிகரித்துள்ளமை தொடர்பில் கருத்துரைத்துள்ள அவர்,
உரிய மார்க்கங்களின் ஊடாக செல்லாத பெண்களே இவ்வாறான மரணங்களை தழுவுகின்றனர். எனவே அது தவிர்க்கப்பட வேண்டும்.
இந்தநிலையில் மலையக இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் அரசாங்கம் இன்னும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் பிரச்சினைகள் இன்று சர்வதேசத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
எனினும் மலையக மக்களின் பிரச்சினைகள் இன்னும் சர்வதேசத்துக்கு கொண்டு செல்லப்படவில்லை. இந்த நிலையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றும் ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
-tamilwin.com