புதிய அரசியல் அமைப்பின் பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சிரேஸ்ட அமைச்சர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
ஆங்கில செய்தித்தாள் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
இந்த அரசியலமைப்பு தொடர்பில் தாமத நிலை பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அடிப்படையில் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் புதிய அரசியலமைப்பின் யோசனைகளை மக்களுக்கு தெரியப்படுத்தவும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதேவேளை புதிய அரசியமைப்புக்கு நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
இதனைவிடுத்து சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல அவசியம் இல்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்
-tamilwin.com