இரவில் உலக நாடுகள் எப்படி இருக்கின்றன : நாசா வெளியிட்ட வைரல் புகைப்படங்கள்

இரவில் உலக நாடுகள் எப்படி இருக்கின்றன என்ற செயற்கை கோளின் புகைப்படங்களை அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா வெளியிட்டுள்ளது.

இரவு நேரங்களில் பூமி எவ்வாறு இருக்கின்றது என்ற “நைட் லைட்ஸ்” என்ற செயற்கை கோளின் புகைப்படங்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிடப்படுகின்றது.

அந்த வகையில் 2012ஆம் ஆண்டுக்கு பின்னர் இரவு நேரங்களில் பூமி எப்படி இருக்கின்றது என்ற புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. குறிப்பாக 2016ஆம் ஆண்டு பூமி இரவு நேரத்தில் எவ்வாறு இருக்கின்றது என்ற புகைப்படங்கள் வைரலாகியுள்ளன.

இதேவேளை, “நைட் லைட்ஸ்” புகைப்படங்களை அடிக்கடி வெளியிட முடியுமா என நாசா நிறுவனம் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறு வெளியிட முடியுமாக இருந்தால் தட்பவெட்ப நிலையை கணிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-tamilwin.com