படகு மூலம் அவுஸ்திரேலியா வருபவர்களுக்கு கடும் எச்சரிக்கை

australia refugeeஅவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக படகு வழியாக வர முயற்சிப்பது தோல்வியையே கொடுக்கும் என அந்நாட்டு குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட்டர் டட்டனும் எல்லைப் பாதுகாப்பிற்கு(Operation Sovereign Borders) இராணுவ ரீதியாக பொறுப்பு வகிக்கும் ஸ்டீபன் ஓஸ்போர்னும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சட்டவிரோதமாக படகுகள் மூலமாக அவுஸ்திரேலியா வருவோர் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்கள், 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கையிலிருந்து கடல் வழியாக அவுஸ்திரேலியாவுக்குள் வர முற்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றது.

25 பேரைக் கொண்ட அப்படகு இலங்கைக்கே மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு Operation Sovereign Borders தொடங்கியதிலிருந்து இதுவரை 30 படகுகளில் வந்த 765 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் இதுதொடர்பாக இந்தோனேசியாவில் பல்வேறு கைதுகளும் ஆட்கடத்தல் தொடர்பாக பலருக்கு தண்டனையும் வழங்கப்பட்டுள்ளன என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே சமயம், கடல் வழியே வர முயற்சிக்கும் அகதிகள் தொடர்பாக அவுஸ்திரேலியா கடைப்பிடிக்கும் கடுமையான கொள்கை மனித உரிமைச் சார்ந்த விமர்சனங்களுக்கும் ஆளாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த முகாம்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் இன்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 -tamilwin.com