ஹிஷாமுடின் உசேனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் புதிய அமைச்சர் பொறுப்பு குறித்து கூறப்படும் ஊகங்கள் வேடிக்கையாக உள்ளன என்று கூறிய இளைஞர் விளையாட்டு அமைச்சர் கைரி ஜமாலுடின் அபு பக்கார் அவற்றில் உண்மை அறவே இல்லை என்றார்.
அம்னோவில் உள்ள அனைவரும் அந்நியமனத்தை ஆதரிப்பதாக அவர் சொன்னார்.
“அது ஒளிவுமறைவின்றி செய்யப்பட்ட ஒரு சாதாரண நியமனம். அதனால்தான் அம்னோவில் உள்ள எங்களுக்கு அது தொடர்பாக வந்து கொண்டிருக்கும் ஊகங்களையும் விமர்சனங்களையும் பார்க்க வேடிக்கையாக உள்ளது”, என்று கைரி புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.