வருகிற சனிக்கிழமை வட கொரியா அணுகுண்டு ஏவுகணை வீசி சோதனை! அமெரிக்காவிற்கு ? அதிர்ச்சி தகவல்

koreaவடகொரியா கடந்த 2006–ம் ஆண்டு தொடங்கி, தொடர்ந்து 11–வது ஆண்டாக அணு ஆயுத சோதனையிலும், கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமைமிக்க ஏவுகணை சோதனையிலும் ஈடுபட்டு வருகிறது.

உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும், சர்வதேச உடன்படிக்கைகளையும் உதறித்தள்ளிவிட்டு, கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் 4 முறை அணுகுண்டு சோதனையிலும் கடந்த ஆண்டு ஜனவரி 6–ந் தேதி அணுகுண்டை விட பல மடங்கு சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு சோதனையிலும் அந்த நாடு ஈடுபட்டு, உலக அரங்கை அதிர வைத்தது. கடந்த மாதம் அடுத்தடுத்து 4 ஏவுகணை சோதனைகளை வடகொரியா நடத்தி உலக அரங்குக்கு அதிர்ச்சி அளித்தது.

அந்த ஏவுகணைகள் ஜப்பான் கடலில் போய் விழுந்தன.கடந்த 6–ந் தேதி மீண்டும் நடுத்தர ரக ஏவுகணை ஒன்றை கிழக்கு கடலோரத்தில் அமைந்துள்ள சின்போ நகரில் ஏவி சோதித்தது. இப்படி அந்த நாடு அடுக்கடுக்காக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவது அண்டை நாடான தென்கொரியா, ஜப்பான் நாடுகளுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.

கொரியா தீபகற்பத்தில் தொடர்ந்து அசாதாரண சூழ்நிலை நிலவி வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்கா போர்க்கப்பலை அனுப்பியுள்ளது. அமெரிக்காவின் இந்நடவடிக்கைக்கு வட கொரியா அரசு கடுமையான கண்டனங்களை தெரிவித்தது.

மேலும், அமெரிக்காவின் இந்நடவடிக்கைக்கு விரைவில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டும் என வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், எதிர்வரும் சனிக்கிழமை அன்று அணுகுண்டு ஏவுகணையை வீசி வட கொரியா பரிசோதனை செய்ய உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், வட கொரிய நாட்டிற்கு அணுகுண்டு அவசியம் தேவை என எண்ணிய முன்னாள் ஜனாதிபதியான கிம் சுங் என்பவர் அணுகுண்டை தயாரிக்க தொடங்கியுள்ளார்.

இவருடைய பிறந்த நாள் சனிக்கிழமை வரவுள்ளதால் இதே தினத்தில் வட கொரியாவின் 6-வது அணுகுண்டு பரிசோதனை நிகழ்த்தப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது. வட கொரியாவில் உள்ள ஒரு சுரங்கத்தில் இந்த பரிசோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலக நாடுகள் மற்றும் ஐ.நா சபையின் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து அணுகுண்டு பரிசோதனையில் ஈடுப்பட்டு வருவது அண்டை நாடுகள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

-athirvu.com