போர்பதற்றம்: சீனாவில் இருந்து வட கொரியா செல்லும் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தம்

north_south_001வடகொரியா இன்று அணுகுண்டு சோதனை நடத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வடகொரியா சோதனை நடத்தினால், அந்நாட்டின் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா படைகள் தயாராக நிறுத்தப்பட்டுள்ளது.

வடகொரிய நிறுவனர் கிம் இரண்டாம் ஜங்கின் 105வது பிறந்த தினம் இன்று கொண்டாப்படுகிறது.

வழக்கமாக அவரது பிறந்தநாளில் பிரம்மாண்ட ராணுவ ஒத்திகை அல்லது ஏவுகணை சோதனையை வடகொரியா மேற்கொள்ளும்.

இந்த முறை அணுகுண்டு சோதனை நடத்த வடகொரியா திட்டமிட்டுள்ளது. அதற்கான நடவடிக்கையில் இறங்கியதை அமெரிக்காவின் செயற்கைகோள் படங்கள் உறுதி செய்தன.

இதையடுத்து கொரிய தீப கற்ப பகுதிக்கு அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல் யுஎஸ்எஸ் கார்ல் வின்சன் தலைமையிலான போர் குழுவை அனுப்ப அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அந்த கப்பல் தற்போது தாக்குதலுக்கு தயாராக உள்ளது.

திட்டமிட்டபடி வடகொரியா இன்று அணு ஆயுத சோதனையோ, ஏவுகணை சோதனையோ நடத்தினால், அந்நாடு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது நிச்சயம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் எந்த அணு ஆயுத தாக்குதலுக்கும் பதிலளிக்க வடகொரியா தயாராக உள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

போர் சூழல் காரணமாக வட கொரியாவுக்கான அனைத்து விமான சேவைகளும் சீனா அதிரடியாக நிறுத்தியுள்ளதை அடுத்து வட கொரியாவில் இருந்து கடைசி விமானமும் பீஜிங் விமான நிலையத்தில் வந்து சேர்ந்துள்ளது.

வட கொரியாவின் முரட்டு பிடிவாதத்தையும் தொடர்ந்து நடத்திவரும் அணு சோதனைகளையும் சீனா கண்டித்து வருகிறது. இருப்பினும் வட கொரியாவுக்கு எதிராக சீனாவின் இந்த கண்டனங்களும் எச்சரிக்கைகளும் வெறும் கண் துடைப்பு நாடகம் என்றே கருதுகின்றனர்.

மட்டுமின்றி அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றுக் கொண்டது முதல் வட கொரியாவுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது.

வட கொரியாவுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுக்க நேர்ந்தால் கண்டிப்பாக இந்த போரில் வெற்றியாளராக எவரும் எழப்போவதில்லை என சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார்.

மேலும், இதுவரை இல்லாத வகையில் போர் சூழல் மிக உச்சத்தில் இருப்பதால் பயணிகள் வட கொரியா நோக்கி செல்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரித்துள்ளார்.

தற்போது விமான சேவையும் அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளதால் ஒரு வகை பதற்றமான மன நிலையில் மக்கள் உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

-tamilwin.com

https://youtu.be/C0pk6yWJ_Jc