வடகொரியாவின் அசத்தலான இராணுவ அணிவகுப்பு! அமெரிக்காவுக்கு சவால்?

treats_northkor_001வட கொரியாவின் ஸ்தாபக தலைவர் கிம் இரண்டாம் சங்கின் 105வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்றைய தினம் தலைநகர் பியாங்யாங்கில் பாரிய இராணுவ அணிவகுப்பு நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.

கிம் இரண்டாம் சங் சதுக்கத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பல ஆயிரம் இராணுவத்தினர் அணிவகுப்பில் கலந்துகொண்டிருந்தனர். அத்துடன், ஏவுகணைகள், ரொக்கெட் குண்டுகள் மற்றும் கவச வாகனங்கள் என்பன இந்த அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தன.

அண்மைய காலமாக சர்வதேச எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா அணு ஆயுத சோதனையில் ஈடுபட்டுள்ளது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது.

இந்நிலையில் அமெரிக்காவுக்கு தனது இராணுவ பலத்தை காண்பிப்பதற்காக குறித்த இராணுவ அணிவகுப்பை வடகொரியா ஏற்பாடு செய்திருப்பதாக சர்வதேச இராணுவ வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

எவ்வாறாயினும், வடகொரியாவின் இந்த செயற்பாடு அமெரிக்காவுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் இராணுவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

-tamilwin.com