உலக சந்தையில் தங்கத்தின் விலை திடீரென உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வட கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் இடம்பெற்றுள்ள மோதல் நிலையால், மூன்றாவது உலகப் போர் ஒன்று உருவாகும் என்ற நிலையிலேயே இவ்வாறு தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் ஒரு அவுன்ஸ் தங்கம் 1288 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
எவ்வாறாயினும் விரைவில் 1300 அமெரிக்க டொலராக உயர்வடையலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக சந்தையில் தங்கத்தை அவுன்ஸ் கணக்கில் விலை சொல்லுவார்கள். ஒரு அவுன்ஸ் என்பது 32 கிராம், அதாவது நான்கு சவரன். இது சொக்கத் தங்கம், 24 கரட் தங்கம்.
எதிர்வரும் 28ஆம் திகதி அட்சயதிருதியை வர இருக்கின்றது. இதனால் தங்கம் வாங்குவதற்கு காத்திருக்கும் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
-tamilwin.com